கரோனா கட்டுக்குள் வரும்வரை பள்ளிகளைத் திறக்க வேண்டாம் என, பெரும்பாலான பெற்றோர் கருத்து தெரிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறந்து பாடம் நடத்துவது குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம்நடத்த பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார். அதன்படி
திருநெல்வேலி மாவட்டத்தில் 302 பள்ளிகளில் பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. பெற்றோருக்கு படிவம் வழங்கப்பட்டது. அதில், நவம்பர் 16-ம் தேதி பள்ளிகளை திறக்கலாமா, வேண்டாமா என்றும், திறப்பதாக இருந்தால்எந்த வகுப்புகளுக்கு பள்ளிகளைத்திறக்கலாம் என்றும் கேட்கப்பட்டிருந்தது. பெற்றோர் அந்த படிவத்தைநிரப்பி அளித்தனர். மேலும், கருத்து கேட்பு கூட்டத்தை வீடியோமூலம் பதிவு செய்து, அதன் பதிவுகளை மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டிருந்தது. சில தனியார் பள்ளிகள் இணையதளம் மூலம் கருத்துபடிவத்தை அனுப்பி, பெற்றோரின்கருத்துகளை சேகரித்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளன.
தென்காசி மாவட்டத்தில் 232 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நேற்று கருத்து கேட்புக்கூட்டம்நடைபெற்றது. பல்வேறு பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்புசாமி நேரில் சென்று, கருத்து கேட்பு கூட்டத்தை ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் 319 பள்ளிகளில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பெற்றோர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தாமதமாக பள்ளிகளைத் திறந்தால் நல்லதுஎன்று கருத்து தெரிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.“பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என்று சிலரும், கரோனாகட்டுக்குள் வரும் வரை திறக்கக்கூடாது என பலரும், 12-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனவும்பல்வேறு விதமான கருத் துக்களையும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பி வைக்கப்படும்” என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 435 பள்ளிகளில் மாணவ, மாணவியரின் பெற்றோரிடம் கருத்துகள் பெறப்பட்டன.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago