ஒருங்கிணைந்த வேலூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 238 நாட்களுக்கு பிறகு இன்று திரையரங்குகள் திறப்பு 50 சதவீதம் இருக்கைகளுடன் பார்வையாளர்கள் அமர ஏற்பாடு

By வ.செந்தில்குமார்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டம் மற்றும் தி.மலை மாவட்டங் களில் குறைந்த எண்ணிக்கை யிலான திரையரங்குகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளன. நாளை முதல் அனைத்து திரையரங்கு களும் முழு அளவில் செயல்படும் என கூறப்படுகிறது. திரையரங்கு களில் 50 சதவீதம் இருக்கைளுடன் பார்வையாளர்கள் அமருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 15-ம் தேதி மாநில எல்லை யோரங்களில் உள்ள சில திரைய ரங்குகள் மூடப்பட்டன. தொடர்ந்து, மார்ச் 17-ம் தேதி முதல் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டன. அதன்பிறகு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையிலும் திரையரங்குகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை.

இதற்கிடையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள ஊரங்கு தளர்வில் நவம்பர் 10- ம் தேதி (இன்று) முதல் திரையரங்குகள் செயல்படலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திரையரங்குகளை தயார் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. 238 நாட்களுக்குப் பிறகு திரையரங்குகள் இன்று முதல் வழக்கம்போல் செயல்படும் என்பதால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் உள்ளனர்.

ஆனால், அரசு அறிவித்தபடி திரையரங்குகளில் இன்று படங்களை வெளியிடுவதில் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடாற்காடு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவரும் திரையரங்க உரிமையாளருமான அப்ஸரா பாலாஜி கூறும்போது, ‘‘பெரும் பாலான திரையரங்குகள் செவ்வாய்க்கிழமை (நவ.10) என்பதால் திறக்க முன்வரவில்லை. தீபாவளிக்கு புதிய படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. வரும் 13- ம் தேதி வரை நடிகர் அஜீத், விஜய் நடித்த பழைய படங்களையும், சிலர் ஹிந்தி, ஹாலிவுட் படங்களை திரை யிடவும் தயாராக இருக்கிறார்கள். புதன்கிழமை முதல் அனைத்து திரையரங்குகள் செயல்படும்’’ என்றார்.

திரையரங்கில் சென்று படம் பார்க்க விரும்பும் ரசிகர்கள் பலர் பழைய படமாக இருந்தாலும் முதல் நாள் காட்சிக்கு செல்ல ஆர்வத்து டன் இருக்கின்றனர். ஒரு சில திரை யரங்குகளில் அரசின் கரோனா விதிகளை கடைபிடிக்க தேவை யான முன்னேற்பாடு பணிகளை யும் திரையிடக்கூடிய படங்களின் தேர்வு தொடர்பாகவும் ஆலோ சனை நடத்தி வருவதால் நாளை (புதன்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்படும் என கூறப்படு கிறது.

இதுதொடர்பாக வேலூர், தி.மலை மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலை வர் எஸ்.பிக்சர்ஸ் சீனிவாசனிடம் கேட்டதற்கு, ‘‘வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர், தி.மலை மாவட்டங்களில் மொத்தம் 89 திரையரங்குகள் உள்ளன. புதன்கிழமை முதல் அனைத்து திரையரங்குகளும் செயல்படும். தீபாவளிக்கு ‘இரண்டாம் குத்து’ படம் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், சில புதிய படங்கள் வெளியாகவும் வாய்ப்புள்ளது. அதேபோல், வி.பி.எப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதால் தற்போதைக்கு பழைய திரைப்படங்களை திரையிட பல திரையரங்குகள் முன்வந்துள்ளன’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்