வேலூரில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

வேலூரில் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் ரங்காபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பாக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு, தொ.மு.ச., பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., பரசுராமன், ஏ.ஐ.டி.யு.சி., ராமதாஸ், எச்.எம்.எஸ்., சந்திரசேகரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில், பங்கேற்றவர்கள் 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும். நிர்வாகம் செலவு செய்த தொழிலாளர் பணம் ரூ.8 ஆயிரம் கோடியை உடனடியாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், முக்கிய தொழிற்சங்க நிர்வாகிகள் மட்டும் தலைமை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். முற்றுகைப் போராட்டத்தை முன்னிட்டு அங்கு ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டி ருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்