ஏலகிரி மலையில் வாரச் சந்தை யை மீண்டும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மலை வாழ் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் 14 குக்கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் தேவைக்காக ஏலகிரி மலையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று வாரச்சந்தை இயங்கி வந்தது. இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் வாரச்சந்தை மூடப்பட்டது. தற்போது, திருப் பத்தூர் மாவட்டத்தில் ஊரடங் கில் பல்வேறு தளர்வுகள் அளிக் கப்பட்டு வாரச்சந்தை, மார்க்கெட், பஜார், காய்கறி சந்தைகள் இயங்கிவருகின்றன. ஆனால், ஏலகிரி மலையில் செயல்பட்டு வந்த வாரச் சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் அனு மதி வழங்கவில்லை என தெரிகி றது. இதையறிந்த மலைவாழ் மக்கள், மற்ற இடங்களைப்போல ஏலகிரி மலையிலும் வெள்ளிக் கிழமை தோறும் வாரச்சந்தையை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிவழங்க வேண்டும்.
இதனால், 14 குக்கிராமங் களைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மலைவாழ் மக்கள் பயன்பெறுவார்கள் என மாவட்ட ஆட்சி யர் சிவன்அருளை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago