செங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சைகளுக்கான துறைகள் செயல்படுகின்றன.
தினமும் 4,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர்.
பழைய கட்டிடத்தில் இருந்து மருத்துவமனையின் புதிய கட்டிடத்துக்கு பல்வேறு பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் எந்த துறை, எந்த வார்டு, எங்கு இருக்கிறது என்பதை கண்டறிவதில் குழப்பம் ஏற்படுகிறது.
இதனால், புதிய கட்டிடத்தின் தரைத்தளம், முதல் தளம், மற்ற தளங்களில் உள்ள வார்டுகளின் பட்டியலை அனைவரும் எளிதில்தெரிந்துகொள்ளும் வகை யில் வைக்க வேண்டும்.
மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் வழிகாட்டிப் பலகையை வைக்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago