உளுந்தூர்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத் தைப் பயன்படுத்தி இளைஞர்கள் பல்வேறு விளையாட்டுகளை ஆடி வருகின்றனர்.அந்த வகையில் தற்போது கால்பந்து விளையாட்டு நடைபெற்று வந்துள்ளது.
இதையறிந்த பள்ளித் தலை மையாசிரியர் ராமச்சந்திரன் நேற்று,விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளைஞர்களிடம் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லு மாறு கேட்டுக்கொண்டுள்ளார். இளைஞர்கள் வெளியேற மறுத்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களைதலைமையாசிரியர் வலுக்கட் டாயமாக வெளியேற்றியுள்ளார்.
அந்த இளைஞர்கள் விருத்தா சலம் - உளுந்தூர்பேட்டை சாலை யில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், தலை மையாசிரியரிடம் பேசியுள்ளார். அப்போது, பதிலளித்த தலை மையாசிரியர் ராமச்சந்திரன், பள்ளி விடுமுறை நாட்களில் வளாகத்தில் விளையாட அனுமதி அளிக்கும் பட்சத்தில், பலர் மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட நேரிடும்.
அதனால் விளையாட அனுமதி அளிப்பதில் பிரச்சினை உள்ளது என விளக்கியுள்ளார். இதையடுத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் அனை வரும் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago