காவல் துறை குறைதீர்க்கும் முகாம்

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை சார்பில், மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு 156 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்டங்கள், மாவட்டக் குற்றப்பிரிவு மற்றும் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு ஆகியவற்றில், நவ.7,8-ம் தேதிகளில் காவல்துறை சார்பில் ‘மாபெரும் குறைதீர்ப்பு முகாம்’ நடத்தப்பட்டது.

முகாமில் நிலப் பிரச்சினை, சிறு குற்ற வழக்குகள் குறித்து மக்கள் மனுக்களை அளித்தனர். டிஎஸ்பிகள், ஆய்வாளர்கள் புகார் மனு அளித்தவர்கள், அப் பிரச்சினையில் தொடர்புடைய வர்கள் என இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு கண்டனர்.

நவ.7-அன்று மாவட்டம் முழுவதும் 85 புகார் மனுக்கள் பெறப்பட்டு, 69 மனுக்களுக்கும், நேற்று 157 மனுக்கள் பெறப்பட்டு அதில் 86 மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. இனி நடத்தப்படும் முகாம்களில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் குறைகளைத் தீர்க்கலாம் என மாவட்ட எஸ்.பி. இ. கார்த்திக் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்