விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத் தொகை

By செய்திப்பிரிவு

தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.43.50 லட்சம் மதிப்பில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

சத்திஸ்கர் மாநிலம் துர்க், மணிப்பூர், ஆந்திரா, தெலங்கானா, டெல்லி ஆகிய வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினத்தில் 64-வது தேசிய பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. வால்சண்டை, பூப்பந்தாட்டம், வாலிபால், சிலம்பாட்டம் மற்றும் கேரம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பங்கேற்று, பதக்கம் வென்ற 11 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்பிலும், 14 விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.25 லட்சம் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு ரூ.3.50 லட்சம் என மொத்தம் ரூ.43.50 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டு தெரிவித்தார். விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப. மணிராஜ், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ். செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்