ஈரோடு பேருந்து நிலையத்தை யும், அரசு மருத்துவமனை சந்திப்பினையும் இணைக்கும் மேட்டூர் சாலையில் பல்வேறு வணிக நிறுவனங்கள் செயல் படுகின்றன. இந்த சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், இருவழிப் பாதையாக இருந்ததாலும் ஒருவழிப்பாதையாக கடந்த மாதம் மாற்றம் செய்யப்பட்டது. இதனால், வர்த்தகம் பாதிக்கப்படுவதாக வணிகர்கள் தரப்பில் எஸ்பியிடம் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் மற்றும் எஸ்பி தங்கதுரை உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், மேட்டூர் சாலையை இருவழிப்பாதையாக பயன்படுத்த அனுமதித்துள்ள போலீஸார், இரு சக்கர வாகனங்கள் மட்டும் இரு வழியில் இயங்கலாம் என கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
மேலும், மேட்டூர் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்த கயிறு கட்டியுள்ள போலீஸார், இதனைத் தாண்டி, போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்தினால் அவை பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago