சேலத்தில் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களிடம் இருந்து ரூ.1.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ.சதீஷ் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாநகரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதால், தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கடந்த 16-ம் தேதி முதல் சுமார் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் கண்காணிக்க 8 சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கடந்த 16-ம் தேதி தொடங்கி 6-ம் தேதி வரையான 22 நாட்களில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுவினர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின்போது, கரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத 56 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து, ரூ.1.23 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் அபராதம்
நாமக்கல்லில் நகராட்சி ஆணையர் பொன்னம்பலம் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமூக இடைவெளியை கடைபிடிக்காத 5 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago