மருத்துவ படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சத வீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
அமைப்பின் மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அமைப்பின் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். அமைப்பின் பொதுச் செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச் செயலாளருமான ரங்கராஜன் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பள்ளிகளில் கற் போம்- எழுதுவோம் என்ற திட்டத்தில் ஆசிரியர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து சமூக நலத் துறை மூலம் தன்னார்வலர்களைப் பயன்படுத்த வேண்டும். ஜாக்டோ ஜியோ போராட் டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப் பட்ட 17ஏ , 17பி ஆகிய குற்றக் குறிப் பாணைகளை ரத்து செய்வதுடன், அவர்களை பணி வரன்முறை செய்து போராட்ட காலத்துக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சி முடித்த 4 லட்சத்துக் கும் அதிகமானோருக்கும், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்ற 80,000 பேருக்கும் இதுவரை பணி வழங்கப்படாத நிலையில், 40 வயதைக் கடந்தவர்களுக்கு பணி வழங்க மறுக்கும் அரசாணை 12-ஐ ரத்து செய்து, ஆசிரியர் பணியிடங்களை வயது வரம்பின்றி நிரப்ப வேண்டும்.
மருத்துவ படிப்பில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 2.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து, மொத்த உள் ஒதுக்கீட்டை 10 சதவீதமாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago