கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மத்திய மண்டலத்தில் 95.93 சதவீதம் பேர் டிஸ்சார்ஜ்

By செய்திப்பிரிவு

மத்திய மண்டலத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களில் 95.93 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

திருச்சியில் 38 பேருக்கும், தஞ் சாவூரில் 45 பேருக்கும், திருவாரூரில் 38 பேருக்கும், நாகையில் 38 பேருக்கும், புதுக்கோட்டையில் 25 பேருக்கும், கரூரில் 28 பேருக்கும், பெரம்பலூரில் 8 பேருக்கும், அரியலூரில் 12 பேருக்கும் நேற்று புதிதாக கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சியில் 49 பேர், அரியலூரில் 5 பேர், கரூரில் 6 பேர், திருவாரூரில் 37 பேர், தஞ்சாவூரில் 55 பேர், புதுக்கோட்டையில் 36 பேர், நாகையில் 44 பேர், பெரம்பலூரில் 3 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் நேற்று உயிரிழந்தார்.

மத்திய மண்டலத்தில் கரோனாவால் இதுவரை திருச்சி மாவட்டத்தில் 12,817 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12,323 பேரும், கரூர் மாவட்டத்தில் 4,381 பேரில் 4,014 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 10,796 பேரில் 10,452 பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 2,199 பேரில் 2,129 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 4,451 பேரில் 4,337 பேரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 15,729 பேரில் 15,249 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 9,958 பேரில் 9,535 பேரும், நாகை மாவட்டத்தில் 6,995 பேரில் 6,553 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி, மத்திய மண்டலத்தில் கரோனாவால் இதுவரை 67,326 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 64,592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இது 95.93 சதவீதமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்