சேர்வலாறு, நம்பியாறு அணைகளில் தலா 30 மி.மீ. மழை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் சேர்வலாறு, நம்பியாறு அணைகளில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக தலா 30 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): பாபநாசம்- 19, மணிமுத்தாறு- 1.8, அம்பாசமுத்திரம்- 8, சேரன்மகாதேவி- 12.2, ராதாபுரம்- 6, நாங்குநேரி- 5.5, களக்காடு- 1.6, பாளையங்கோட்டை, திருநெல்வேலியில் தலா 5 மி.மீ மழை பதிவாகி இருந்தது.

பாபநாசம் அணை நீர்மட்டம் 102.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,324 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404.75 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட் டிருந்தது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 75.85 அடியாக இருந்தது. அணை க்கு விநாடிக்கு 154 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 95.86 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 32 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 60 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 40 கனஅடி தண்ணீர் திறந்துவிடப் பட்டிருந்தது.

மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதாலும், அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். திருநெல்வேலி மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் சாகுபடிக்காக நிலத்தை தயார்படுத்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு ள்ளனர்.

தூத்துக்குடி, குமரியிலும் மழை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 6, காயல்பட்டினம் 40, குலசேகரன்பட்டினம் 4, விளாத்திகுளம் 1, வைப்பாறு 7, கயத்தாறு 11, கடம்பூர் 15, எட்டயபுரம் 1, சாத்தான்குளம் 17.4, வைகுண்டத்தில் 0.3 மி.மீ., மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று கன்னிமாரில் 12.4 மி.மீ., மழை பெய்திருந்தது. பூதப்பாண்டியில் 11 மிமீ., மாம்பழத்துறையாறில் 5, ஆனைக்கிடங்கில் 4, முக்கடலில் 4 மிமீ மழை பெய்திருந்தது. பேச்சிப்பாறை அணையில் 43.50 அடி, பெருஞ்சாணியில் 69.50 அடி, முக்கடல் அணையில் 22 அடி தண்ணீர் உள்ளது.

பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக 611 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 621 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. பெருஞ்சாணி அணைக்கு உள்வரத்தாக 262 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்