அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் விருப்பப்படி கார்த்திகை தீபத் திருவிழாவை வழக்கம்போல் நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

அண்ணாமலையார் கோயிலில் கரோனா விதிகளை பின்பற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை வழக்கம்போல் நடத்த வேண்டும் என திருவண்ணாமலை சட்டப் பேரவை உறுப்பினரும் திமுக முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "சைவத்தின் தலைநகராக விளங்கும் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான நாட்கள் நெருங்கி வருகிறது. ஆனால், விழாவுக்கான முன்னேற்பாடுகள் ஏதும் நடைபெறவில்லை. கரோனா தோற்று பரவி வரும் நிலையில், கார்த்திகை தீபத் திருவிழா வழக்கம்போல் நடைபெறுமா? என்ற கவலை பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

கரோனா தடுப்பு வழிகாட்டி

இந்தியாவில் பெரிய ஆன்மிக திருவிழாவான பூரி ஜெகன்நாதர் கோயில் திருவிழா, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. அதேபோல், தமிழகத்தில் தஞ்சை பெருஉடையார் கோயில் அன்னாபிஷேக விழா, ராஜராஜ சோழனின் சதய விழா, குலசேகரப் பட்டினத்தின் தசரா விழா, மதுரை அம்மாபட்டியில் 7 கிராம மக்கள் நடத்திய முத்தாலம்மன் கோயில் திருவிழா நடைபெற்றுள்ளது.

இந்த விழாக்களை போன்று கரோனா தடுப்பு வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்றி கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண் டும். பஞ்சமூர்த்திகளின் மாட வீதி உலாவை வழக்கம் போல் நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாட வீதியுலா...

இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை தொலை பேசியில் தொடர்பு கொண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை வழக்கம்போல் 10 நாட்களுக்கு மாட வீதியுலாவுடன் நடைபெற நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகிறேன்.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரிடம் ஆலோசித்து வழக்கம் போல் திருவிழா நடைபெற நடவடிக்கை எடுத்து வருவதாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கூறுகின்றனர்.

பக்தர்கள், ஆன்மிக பெரு மக்கள், உபயதாரர்கள், முன் னாள் அறங்காவலர்கள் ஆகி யோரது வேண்டுகோளை ஏற்று, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை பின் பற்றி, சமூக இடைவெளியை கடைபிடித்து கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்