மகா தீபம் ஏற்றப்படும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணா மலையில் தி.மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர விந்த் நேற்று ஆய்வு செய்தார்.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில், காவல் தெய்வ மான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் வரும் 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு பஞ்ச மூர்த்திகளின் உற்சவம் தொடங்கும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயிலில் வரும் 29-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும். மலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் சுமார் 2,500 பக்தர்களை மாவட்ட நிர்வாகம் அனு மதித்து வருகிறது. இந்தாண்டு, கரோனா பரவலால் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை. மகா தீபம் ஏற்ற பயன்படுத் தப்படும் கொப்பரை, நெய் மற்றும் திரி ஆகியவை அண் ணாமலை உச்சிக்கு கொண்டு செல்லப்படும். இந்நிலையில், மகா தீப மலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார். மகா தீபம் ஏற்றப்படும் மலை உச்சியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும், மலை உச்சியில் காவல் துறை மூலம் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
அப்போது, உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, துணை காவல் கண்காணிப் பாளர்கள் அண்ணாதுரை, பழனி மற்றும் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago