திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக சேர்வலாறு அணைப்பகுதியில் 53 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் பிற இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 10, மணிமுத்தாறு- 8.4, நம்பியாறு- 5, கொடுமுடியாறு- 5, சேரன்மகாதேவி- 5.80, பாளையங்கோட்டை- 2, ராதாபுரம்- 3, திருநெல்வேலி- 2.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 102.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 803 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையி லிருந்து 1,404 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணி முத்தாறு அணை நீர்மட்டம் 75.70 அடியாக இருந்தது. அணைக்கு
விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 35 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு நீர்மட்டம் 97.24 அடியாகவும், வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 10.25 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 8.46 அடியாகவும், கொடுமுடியாறு நீர்மட்டம் 31.25 அடியாகவும் இருந்தது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் சிவகிரியில் 10 மி.மீ. மழை பதிவானது. சங்கரன் கோவிலில் 7 மி.மீ., ஆய்க்குடியில் 6 மி.மீ., ராமநதி அணையில் 5 மி.மீ., தென்காசியில் 3.20 மி.மி., கடனாநதி அணை, செங்கோட்டை யில் தலா 3 மி.மீ., குண்டாறு அணையில் 2 மி.மீ. மழை பதிவானது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 68.10
அடியாகவும், ராம நதி அணை நீர்மட்டம் 65 அடியாகவும், கருப்பா நதி அணை நீர்மட்டம் 58.73 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 102 அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீர்மட்டம் 2 அடியும், அடவிநயினார் அணை நீர்மட்டம் ஓரடியும் உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago