செங்கம் அருகே உள்ள குப்பனத் தம் அணையை விவசாய தேவைக் காக வரும் 16-ம் தேதி முதல் திறக்க வேண்டும் என விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் செங்கம் அருகே துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 60 அடியாகும். ஜவ்வாதுமலை பகுதியில், சமீபத்தில் பெய்த மழையால், அணையின் நீர்மட்டம் சுமார் 45.30 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 389.70 மில்லியன் கனஅடி (மொத்தம் 700 மில்லியன் கனஅடி) தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 28.24 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 27.10 மி.மீ., மழை பெய் துள்ளளது.
இந்நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று, அணையை திறப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் செங்கம் பொதுப்பணித் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயி கள், ஏரிப் பாசன சங்க நிர்வாகிகள் பேசும்போது, “குப்பனத்தம் அணையை திறந்தால்தான் நெற் பயிர்களை காப்பாற்ற முடியும்” என்றனர். இதையடுத்து நீண்ட ஆலோசனைக்கு பிறகு, விவசாயத்துக்காக குப்பனத்தம் அணையை வரும் 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை திறப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அணை யை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago