திருவண்ணாமலை அடுத்த தேவனந்தல் ஏரியை ரூ.2.50 கோடியில் சீரமைக்க இந்திய விவசாய காப்பீட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் செய்யப்பட்டது.
கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் நீர்வள மேம்பாடு மற்றும் புனரமைப்புப் பணியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் நிறுவனத் தலைவர் போடர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
பின்னர் ஆட்சியர் கந்தசாமி கூறும்போது, “65 ஏக்கர் பரப்பளவு கொண்ட தேவனந்தல் ஏரியில் ரூ.2.50 கோடியில் புனர மைப்புப் பணியை மேற்கொள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கரையை பலப்படுத்துதல், வனம் மேம்பாடு, ஏரியின் நடுவில் சிறு தீவு அமைத்தல், பசுமை வளர்ச்சி, பறவைகள் தங்கு வதற்கான சூழலை அமைத்தல், ஏரியைச் சுற்றி மிதிவண்டி ஓட்டுவ தற்கான பாதை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற உள்ளன.
இந்த பணி ஒரு வருடத்தில் நிறைவு பெறும். இதன்மூலம் தேவனந்தல் ஏரிக்கு உட்பட்ட 1,500 ஏக்கர் விவசாய நிலங்கள் நிரந்தர பாசன வசதி பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago