சேலத்தில் கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் நூலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகர காவல் துறைக்கு உட்பட்டு கிச்சிப்பாளையம் காவல் நிலையம் உள்ளது. இங்கு வழக்கு விசாரணைக்காகவும், பல்வேறு பிரச்சினை சார்ந்தும் பொதுமக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
பொதுமக்கள் நல்ல நூல்களை படித்து, வாழ்க்கையில் முன்னேற்றம் காணும் விதமாக, காவல் நிலையத்தில் புதியதாக நூலகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி, வரவேற்பு அறையின் முன் பகுதியில் நூலகத்துக்கு தனி இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அறிஞர்கள், அரசியல் தலைவர்கள், சிறந்த நாவல்கள், சமையல் குறிப்புகள், ஆன்மிகம் சார்ந்த நூல்கள் என 50-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.
கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு மனு கொடுக்க வரும் மக்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை எடுத்து வாசித்து, மனமாற்றம் கொள்ளவும், காத்திருப்பு நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க காவல் துறையினர் எடுத்துள்ள நடவடிக்கைக்கு அனைத்து தரப்பு மக்களிடையேயும் வரவேற்பை பெற்றுள்ளது. சேலத்தில் முதல் முறையாக கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் அமைக்கப் பட்டுள்ள நூலகத்தை இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago