திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் தளுகை ஊராட்சியில் அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தினர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்த ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.முத்துக் குமாரை மிரட்டிய ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் வேலைக்கு வரும் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண் டும்.
தினக்கூலியாக ரூ.256-க்கு குறையாமல் வழங்க வேண்டும். கால்நடை மருத்துவமனை அருகே யுள்ள கால்நடை நீர்த் தொட்டிக்கு தினமும் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் கிளைச் செயலாளர் ஜி.கோவிந்தராஜூ தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன் போராட்டத்தைத் தொடங்கிவைத்தார். சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பழனிசாமி, ஒன்றியத் தலைவர் ஏ.கணேசன், ஒன்றியச் செயலாளர் இரா.முத்துக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் டி.முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago