தொழில் மேம்பாட்டு பயிற்சி:பூதத்தான்குடியிருப்பில் நெல்லை ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

சேரன்மகாதேவி வட்டம் பூதத்தான்குடியிருப்பில் காஸ்ட் அமைப்பு மூலம் 175 பெண்களுக்கு கைவினை பொருட்கள் உற்பத்தி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறும் களக்காடு நார் சார்ந்த தொழில் கைவினைஞர்கள் குழும பெண்களை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சந்தித்து பேசி, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:

கதர் கிராம தொழில்கள் புனரமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் கிராமங்களில் கைவினைஞர்களால் செய்யப்படும் தொழில்களை ஒருங்கிணைத்து, அவர்கள் தயாரிக்கும் பொருட்களை தரம் மேம்பாடு செய்து, சந்தைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. களக்காடு நார் சார்ந்த தொழில் செய்யும் கைவினைஞர்கள் குழும பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் புதிய வடிவமைப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக கிராம தொழில்கள் ஆணையம் சார்பில் ரூ.96 லட்சம் மானியமாக அளிக்கப்படுகிறது. காஸ்ட் அமைப்பு சார்பில் ரூ.4 லட்சம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்தின்கீழ் கற்றாழை நார், பனை ஓலை, வாழை நாரிலிருந்து கைவினை பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

பத்மநேரி கிராமத்தில் 1,200 சதுர அடியில் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் பொது தொழிற்கூடம் கட்டப்பட்டுள்ளது. கைவினைஞர்களுக்கு ரூ.8.75 லட்சம் மதிப்பீட்டில் நவீன இயந்திரம் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. அனைத்து கைவினைஞர்களுக்கும் மருத்துவம் மற்றும் ஆயுள் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்