மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஊத்துக்குளியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், ஊத்துக்குளியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர்.எஸ். அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர்கள் எஸ்.கே.கொளந்தசாமி, ஜி.கே.கேசவன் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) எஸ்.சின்னசாமி ஆகியோர் பேசினர்.

அத்தியாவசிய பொருட்களின் பதுக்கலுக்கும், விலை உயர்வுக்கும் வழி வகுக்கும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், குறைந்த பட்ச ஆதார விலை வழங்குவதிலிருந்து அரசு விலகி பெருநிறுவன முதலாளிகள் வைப்பதுதான் சட்டம் என கூறும் வேளாண் விளைபொருள் வணிக ஊக்குவிப்புச் சட்டம், விவசாயிகளின் நிலத்தை பறிக்கும் உற்பத்தியை தீர்மானிக்கும் ஒப்பந்த சாகுபடியை திணிக்கும் விவசாயிகளின் விலை உத்தரவாதம் - வேளாண் சேவைகள்மீதான ஒப்பந்த பாதுகாப்புச் சட்டம் ஆகியவை ஜனநாயக மற்ற முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த மத்திய அரசும், மத்திய அரசுக்கு ஆதரவளிக்கும் மாநில அரசின் நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது. விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தைபறிக்கும் மின்சார திருத்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்