நாமக்கல்லில் கால்நடை மருத்துவ முகாம்

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது, என மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் 2020-21-ம் ஆண்டு் தலா 1 முகாம் வீதம் 106 முகாம்கள் நடத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 26 முகாம், டிசம்பர் மாதம் 70 முகாம் மற்றும் 2021-ம் ஆண்டு ஜனவரியில் 10 முகாம் வீதம் நடைபெறவுள்ளது.

இம்முகாம்களில் கால்நடை களுக்கு சிகிச்சை யளித்தல், குடற்புழு நீக்கம், மலடு நீக்கம், செயற்கைமுறை கருவூட்டல் ஆகிய பணிகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இந்த முகாம் நடத்தப்படும் போது கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளை அழைத்து சென்று பயன்பெறலாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்