அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் முதுகலை பொருளா தார படிப்பில் பாடம் நடத்தப்படாமலேயே தேர்வு நடத்தப்பட்ட தால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கேள்வியையே பதிலாக எழுதி கல்லூரி முதல்வரிடம் கொடுத்து விட்டுச் சென்றனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், சம்பந்தப்பட்ட பாடங்களை இணையவழியில் நடத்திட கல்லூரி நிர்வாகங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழகத்திலுள்ள கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கு இணையவழியில் பாடம் நடத்தப்பட்டு, தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவ்வாறே அரியலூர் அரசு கலைக்கல்லூரியிலும் தேர்வுகள் நடைபெற்று வருகின் றன. இக்கல்லூரியில் பயிலும் முதுகலை 2-ம் ஆண்டு பொருளாதார மாணவிகளுக்கான தேர்வு நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு கேள்வித்தாளும் இணையவழியில் அனுப்பப் பட்டது.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் 37 பேர், கேள்வித்தாளை பதிவிறக்கம் செய்துகொண்டு கல்லூரிக்கு வந்தனர். பொருளாதார பாடமே இணையவழியில் நடத்தப்படாத நிலையில், தேர்வை எப்படி எழுதுவது எனத் தெரியாமல் பரிதவித்தனர்.
பின்னர், கேள்விகளையே விடைத்தாளில் எழுதி கல்லூரி முதல்வர் மலர்விழியிடம் கொடுத்துவிட்டு, துறைத் தலைவர் முறையாக இணைய வழியில் பாடம் நடத்தவில்லை. ஆகவே, இந்த தேர்வை மறுபடியும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவிட்டுச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago