புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ரூ.27 லட்சத்துக்கு போலி முத்திரைத்தாள் கொடுத்து மோசடி

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டைமாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராகப் பணியாற்றிய ஜி.வெங்கடர மணி மற்றும் எம்.பழனிசாமி ஆகியோர் புதுக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் கடந்த 2016-ல் வருடாந்திர தணிக்கை செய்துள்ள னர்.

அப்போது, 2014 முதல் 2016 வரையில் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 75 வழக்குகளில் நீதிமன்ற கட்டணமாக செலுத்தப்பட்ட முத்திரைத்தாள்களை ஆய்வு செய்தபோது, ரூ.27 லட்சத்து 66,500 மதிப்புள்ள முத்திரைத்தாள்கள் கலர் ஜெராக்ஸ் எடுக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. பின்னர், பல்வேறு விசாரணைக்கு உட்படுத்தியதில் அவை அனைத்தும் போலி முத்திரைத்தாள்கள் என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. பின்னர், இதுகுறித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் எ.பால்ராஜ் அளித்த புகாரின்பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் டி.அனிதா ஆரோக்கியமேரி, 7 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார். போலி முத்திரைத்தாள்களை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்