கடையநல்லூர் நகராட்சியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட தெருக்களில் சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டது. வாகனங்களில் செல்பவர்கள் வேகமாகச் செல்வதால் விபத்து கள் ஏற்படுவதாகக் கூறி பல்வேறு தெருக்களில் பொதுமக்களே வேகத்தடைகள் அமைத்தனர்.
ஒரே தெருவில் அடுத்தடுத்து பல வேகத்தடைகள் அமைக்கப் பட்டிருந்தன. `அதிக உயரமாக உள்ள இந்த வேகத்தடைகளால் இருசக்கர வாகனங்கள், சைக்கிளில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். அனுமதியின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வேண்டும்’ என, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, எஸ்டிபிஐ உள்ளிட்ட அமைப்புகள், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, அனுமதி யின்றி அமைக்கப்பட்ட வேகத்தடைகளை, நகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர். `பொதுமக்களால் அமைக்கப்பட்ட 160 வேகத்தடைகள் அகற்றப்படும். தேவையான இடங்களில் நகராட்சியே வேகத்தடைகள் அமைக்கும். பொதுமக்கள் தாங்களாகவே வேகத்தடைகள் அமைக்கக் கூடாது’ என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago