நெல்லை, தென்காசியில் மருந்தாளுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில், திருநெல் வேலி அரசு மருத்துவ மனை முதன்மை மருந்தகம்முன் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

`மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்து கிடங்குகளில் தடுப்பூசி மற்றும் மருந்துப் பொருட்களை பராமரித்து சீராக விநியோகித்திட, தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் அனந்தகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், மருந்துகள் பிரிவு அலுவலர் ராஜேஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, அமைப்புச் செயலாளர் அமிர்தலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் நவாஸ்கான் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அசோக், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு ஊழியர் சங்க நிர்வாகி துரைசிங் தொடக்க வுரையாற்றினார். மருந்தாளுநர் சங்க நிர்வாகிகள் குமார், சேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

காலியாக உள்ள 750-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களைநிரப்ப வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்