லாடவரம் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க நட வடிக்கை எடுக்கப்படும் என கலசப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தி.மலை மாவட்டம் கலசப்பாக் கம் அடுத்த லாடவரம் கிராமத்தில் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடை பெற்றது. வட்டார மருத்துவ அலுவ லர் மணிகண்டபிரபு தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பி னர் பன்னீர் செல்வம் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “மருத்துவத் துறையின் துரித நடவடிக்கையால் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று லாடவரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும். கலசப்பாக்கம் சட்டப் பேரவை தொகுதியில் 21 இடங்களில் மினி மருத்துவமனைகள் அமையவுள்ளன. மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதி களில், கலசப்பாக்கத்தில் மட்டும்தான் அதிகப்படியான மினி மருத்துவமனைகள் அமைய உள்ளன. தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளை முதல்வர் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால் கூடுதலாக 1,650 மருத்துவ மாணவர் களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளி மாண வர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு பெற்றுத்தந்துள்ள முதல்வருக்கு நாம் என்றென்றும் நன்றியுடன் இருக்கவேண்டும்” என்றார். பின்னர் அவர், 7 பெண்களுக்கு குழந்தைகள் நலப் பெட்ட கத்தை வழங்கினார்.
இதில், குழந்தைகள் வளர்ச்சி நல அலுவலர் சரண்யா, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, அம்மா பேரவை துணை செயலாளர் ஜி.துரை, வழக்கறி ஞர் செம்பியன், பாஸ்கர், கருணாமூர்த்தி, ஊராட்சி மன்றத் தலைவர் குமரவேல், மாவட்ட நிர்வாகி ரமேஷ், தகவல்தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கபாலி, லட்சுமிநாராயணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago