திருப்பத்தூரில் மகளிருக்கான விழிப்புணர்வு கூட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மகளிர் நல ஆணையம் சார்பில் மகளிருக்கான செயல் பாடுகள், குடும்ப பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள், மலைவாழ் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாலியல் தொந் தரவுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாநில மகளிர் ஆணையத்தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முன்னிலை வகித்துப் பேசும்போது, "பெண்கள் தங்களுக்கு நேரும் பிரச்சினைகளை குறிப்பாக பாலியல் தொந்தரவு போன்ற வற்றை எவ்வித தயக்கமும் இன்றி வெளிகொண்டு வந்து தங்களை பாதுகாக்கத்துக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், உதவி களையும் அரசு செய்து வருகிறது. குழந்தை திருமணத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும்.

மலைவாழ் பெண்களுக்கு வாழ்க்கை மற்றும் பொருளா தாரத்தை மேம்படுத்த அரசு பல் வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மலைவாழ் மக்கள் அரசின் திட்டங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். சுய தொழில் செய்ய முன்னுரிமையும் அளிக்கப்படும்.

மலைவாழ் பெண்கள் கல்வியறிவு பெருவது மிகவும் அவசியமான ஒன்றாகும். குடும்ப பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க மாவட்ட அளவில் செயல்படும் குடும்ப ஆலோசனை மையங்களை அணுகி தீர்வுகாணலாம்." என்றார்.

பெண்கள் தங்கள் பிரச்சினை களை தெரிவிக்க மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சேவை மையத் தின் தொலைபேசி எண் விழிப் புணர்வு துண்டு பிரசுரத்தை ஆட்சி யர் சிவன் அருள் வெளியிட்டார். மேலும், பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக மாநில மகளிர் ஆணையம், சென்னை சேப்பாக்கம் என்ற முகவரியிலோ அல்லது 044-28551155 என்ற தொலைபேசி எண் அல்லது chairscwtn@yahoo.co.in என்ற இணையதள முகவரி மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்