அரியலூர் மாவட்டம் காங்குழி கிராமத்தில், விருத்தாசலத்தில் உள்ள அரசு வனத்தோட்ட மண்டல அலுவலகம் மூலம் யூகலிப்டஸ் மர கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. யூகலிப்டஸ் மரங்கள் வளர்ந்தால், அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறையும். கிணறுகளிலும் நீர் மட்டம் குறைந்து பாதிப்பு ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் காங்குழி கிராம மக்கள், விருத்தாசலம் அரசு வனத்தோட்டக்கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் யூகலிப்டஸ் மரக் கன்றுக்கு பதிலாக முந்திரி மரக்கன்றுகளை நட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago