அமைச்சர்களை முதல்வர் அடக்காவிட்டால் உரிய பதிலடி சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கூட்டாகப் பேட்டி

By செய்திப்பிரிவு

அமைச்சர்களை முதல்வர் பழனி சாமி அடக்கி வைக்காவிட்டால் திமுக உரிய பதிலடி தரும் என திமுக முன்னாள் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னை நந்தனத்தில் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்தியாளர் களைச் சந்தித்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடு மையாக விமர்சித்துள்ளார்.

அதையடுத்து, விருதுநகரில் திமுக முன்னாள் அமைச்சர்களும், அக்கட்சி மாவட்டச் செயலாளர் களுமான சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம்தென்னரசு எம்எல்.ஏ. ஆகியோர் நேற்று கூட் டாகப் பேட்டி அளித்தனர்.

அப்போது, சாத்தூர் ராமச்சந் திரன் கூறியதாவது:

திமுக தலைவர் ஸ்டாலினை தரமற்று விமர்சித்தால் முதல்வர் பாராட்டுவார் என நினைத்து, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஒருமையில் பேசியுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் எந்த மூலை, முடுக்கிலும் சென்று மக்களைச் சந்திப்பார். ஆனால், துணைக்கு ஆள் இல்லாமல் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியால் செல்ல முடியுமா?

9 ஆண்டு காலமாக அதிமு கவினர் தமிழ்நாட்டைக் கொள்ளை அடிக்கின்றனர். ஸ்டாலின் சொன் னதில் என்ன தவறு? திமுக ஆட்சிக்கு வந்ததும் முதலில் சிறை செல்பவர் ராஜேந்திர பாலாஜிதான். தரங்கெட்ட அரசி யல் செய்வதை அவர் நிறுத்த வேண்டும். இல்லையெனில், அவரால் மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது என்றார்.

தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. பேசியதாவது: அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி நாவை அடக்கிப் பேச வேண்டும். உங்களிடம் உள்ள எம்.எல்.ஏ. உயிருக்குப் பயந்துகொண்டு இருப்பதாகக் கூறுகிறார். சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற முடி யுமா? வேறு தொகுதியைத் தேடி ஓடிக்கொண்டு இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி.

உண்மை இருந்தால் உங் கள் மீதுள்ள குற்றங்களைப் பட்டியலிட்ட திமுக தலைவர் மீது வழக்குத் தொடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஸ்டாலினைப் பற்றி கூறவும், தமிழக அரசியல் வரலாற்றைப் பற்றிப் பேசவும் அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை. அமைச்சர் நாவை அடக்காவிட்டால், திமுக தோழர்கள் அவரது நாவை அடக்குவர். விருதுநகர் மாவட் டத்தில் எங்கு வந்தாலும் திமுக வினரின் ஜனநாயக முறைப் படியான எதிர்ப்பை அவர் சந்தித் துத்தான் ஆக வேண்டும். பேசு வதை யோசித்துப் பேசுங்கள். உங்கள் பாணியில் நாங்களும் பதில் அளிக்க முடியும். முதல்வர் பழனிசாமி அமைச்சர்களை அடக் காவிட்டால் திமுக திருப்பி அடிக் கும். திமுகவின் வேகத்தை அவர் களால் தாங்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்