பாசனத்துக்கு நீர் திறக்காததை கண்டித்து சிவகங்கை விவசாயிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

கடந்த செப்.27-ம் தேதி ஒருபோக பாசனத்துக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் சிவகங்கை மாவட்டத்துக்குத் தண்ணீர் திறக்கவில்லை. இதைக் கண்டித்து விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டு சில நாட்களிலேயே நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அமைச்சர் ஜி. பாஸ்கரன், ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் ஒரு மாதத்துக்குத் தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், முறையாகத் தண்ணீர் திறக்கவில்லை. இதையடுத்து பொதுப் பணித்துறை அதிகாரிகளை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் தேவர், ஒருங்கிணைப்பாளர் அன்வர், திமுக ஒன்றியச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி கணேசன், காங்கிரஸ் மாநில மகளிரணி நிர்வாகி வித்யாகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்