சேலத்தில் செயற்கையாக பழுக்க வைத்த 1,250 கிலோ வாழைப்பழம் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சேலம் சின்னக்கடை வீதியில் பழங்கள் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அதிக அளவில் உள்ளது. இங்கு ஒரு சில கடைகளில் ரசாயனங்களைப் பயன்படுத்தி பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து, மக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வீடியோ ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சுருளி தலைமையில் சின்னக்கடை வீதியில் உள்ள 3 பழக்கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில், ஒரு பழக்கடையில், ரசாயனத்தைப் பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட 1,250 கிலோ வாழைப்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், ரசாயனத் தெளிப்புக்கு பயன்படுத்தப்படும் ரசாயன திரவம் எதிப்பான் அடங்கிய 2 தெளிப்பான்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.75 ஆயிரம் ஆகும். இதுதொடர்பாக பழக்கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்