தீபாவளிப் பண்டிகை பயணத்திற்காக கோவை - நாகர்கோவில் ரயிலை இயக்க கோரிக்கை

By செய்திப்பிரிவு

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில் தென்மாவட்டங்களை இணைக்கும் கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயிலை இயக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினர் கே.என். பாஷா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவையில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவை தென்மாவட்ட மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்து வந்தது. அதேபோல், இன்னொரு (லிங்க்) இணைப்பு பெட்டிகள், கோவையிலிருந்து தூத்துக்குடி வரையிலும் இயக்கப்பட்டு வந்தது. கரோனா ஊரடங்கால் இந்த பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால், பயணிகளும், வியாபாரி களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கும் நிலையில், நிறுத்தப்பட்ட ரயிலை இயக்கினால், திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் வரையிலும், இணைப்புப் பெட்டிகள் தூத்துக்குடி வரையிலும் இயக்கப்பட்டால் தென் மாவட்ட மக்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

மேலும், ரயில்வே நிர்வாகத்திற்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும். ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை எம்பிக்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்த வேண்டுமென பயணிகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது, எனத் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்