கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மின் விநியோக துண்டிப்பு போராட்டம் மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டுக் குழு எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், மின் விநியோகம் துண் டிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த் தையை உடனே தொடங்க வேண்டும். துணை மின்நிலைய பராமரிப்புப் பணிகளை தனியா ருக்கு விடக் கூடாது. ஒப்பந்த ஊழி யர்கள் உட்பட அனைவருக்கும் 20 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகங்கள் முன் மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று வேலைக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, திருச்சி மன்னார் புரத்தில் உள்ள மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச மாநில துணைத் தலைவர் பி.மலை யாண்டி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், பொறியாளர் கழக மண்டச் செயலாளர் ஜி.விக்ரமன் உட்பட சுமார் 1,000 பேர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து எஸ்.ரங்கராஜன் கூறும்போது, “கோரிக்கைகளை அரசு நிறை வேற்றாவிட்டால், உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் நடத் தியதுபோல தமிழகத்திலும் மின் விநியோக துண்டிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்’’ என்றார்.

இதேபோல, பெரம்பலூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு மின் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மதியழகன், பழனிவேல், சென்னான், தமிழரசன், மேகலா, ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர் . மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ். அகஸ்டின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

தஞ்சாவூரில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஏஐடியுசி மின் வாரிய தொழிற்சங்க சம்மேளன துணைத் தலைவர் பொன்.தங்கவேல் தலைமை வகித்தார். தொமுச மாநில அமைப்புச் செயலாளர் ஆண்ட்ரூ கிறிஸ்டி தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம் வாழ்த்திப் பேசினார்.

நாகையில் மின்வாரிய பொறியாளர் சங்க வட்டத் தலைவர் பாலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் திரளான மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்