அணைகளில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை தென்காசி ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

அணைகளில் குளிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனதென்காசி ஆட்சியர் தெரிவித் துள்ளார்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயேகண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பது தொடர்பாக அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார வளமைய அலுவலர்கள், ஆதார வள மையங்கள்,சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கான பயிற்சி முகாம் தென்காசியில் நடைபெற்றது.

ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தலைமை வகித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,

“தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக 20-க்கும் குறைவான நபர்களுக்கே கரோனா பாதிப்பு உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சித்த மருத்துவ மையத்தில் தற்போது யாரும் சிகிச்சையில் இல்லை. மேலும், பாதிக்கப்பட்டோருக்கு வீட்டுத் தனிமையில் சிகிச்சை அளிப்பதையும் ஊக்குவித்து வருகிறோம்.அணைகளில் குளிக்கஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அணைகளில் குளிப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்