மின்வாரிய ஊழியர்கள் தர்ணா

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில்பல்வேறு இடங்களில் தர்ணா நடைபெற்றது.

துணை மின் நிலையங்களை தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கக் கூடாது. துணை மின் நிலையங்களில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்பாமல், ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு பெற்றவர்களை கொண்டு நிரப்புவதை கைவிட வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் நடைபெற்ற போராட்டத்துக்கு கே.கே. பெருமாள்சாமி தலைமை வகித்தார். எம்.பீர்முகம்மதுஷா வரவேற்றார். ஏஐடியுசி மாநில செயலர் எஸ்.காசிவிஸ்வநாதன், சிஐடியு மாவட்டச் செயலர் ஆர்.மோகன், தொமுச அமைப்புச் செயலர் ஆர்.தர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு கூட்டமைப்பு செயலாளர் என்.டி.எஸ்.அலெக்சாண்டர் தலைமை வகித்தார். கனிமொழி எம்பி, கீதாஜீவன் எம்எல்ஏ உள்ளிட்டோர் தர்ணா நடைபெற்ற இடத்துக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர்.

நாகர்கோவில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம்முன் நடந்த தர்ணா போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் அய்யம்பெருமாள் தலைமை வகித்தார். வட்ட தலைவர் முருகன் மற்றும் திரளானோர் கலந்துகொண்டனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்