8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் தர்ணா

By செய்திப்பிரிவு

மின்வாரிய தலைவரின் தொழி லாளர் விரோதப் போக்கினை கண்டித்து, வேலூர் வட்ட மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், தொழிற்சங்க தலைவர்களை சந்தித்து பேச மறுக்கிறார். தொழி லாளர்களின் கோரிக்கைகளை கேட்க நேரம் ஒதுக்குவது இல்லை.

கரோனா ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு விடுப்பு தொடர்பான அரசாணை 304-ஐ மின்வாரியத்தில் அமல்படுத்த மறுக்கிறார். உப்பூர், உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய புதிய மின் உற்பத்தி திட்டங்களில் பணி யாற்றி வந்த பொறியாளர்கள், அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து பதவிகளை ரத்து செய் துள்ளார்.

அதேபோல, தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை, ஆகிய பகுதிகளில் உள்ள மின் நிலையங்களின் உற்பத்தியை நிறுத்தி தனியாரிடம் மின்சாரத்தை வாங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இதன் மூலம் மின்சார உற்பத்தி தனியார் நிறுவனத்துக்கு செல்லும் நிலை உருவாகும். மேலும், பல்வேறு தொழிலாளர் விரோதப் போக்கினை செய்து வரும் மின்வாரிய தலைவரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழுவினர் தெரிவித்தனர். இந்த தர்ணாவில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை

இதேபோல், திருவண்ணா மலையில் உள்ள மின்வாரிய அலுவலகம் எதிரில், மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் மாநிலம் தழுவிய தர்ணா நேற்று நடைபெற்றது. இதற்கு, சிஐடியு தலைவர் காங்கேயன் தலைமை தாங்கினார். தொ.மு.ச மாநில செயலாளர் சவுந்தர்ராஜன் தர்ணாவை தொடங்கி வைத்துப் பேசினார்.

தமிழக மின் வாரியத்தில் துணை மின் நிலையங்களின் பராமரிப்புப் பணியை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா நடைபெற்றது. நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற தர்ணாவில் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

முடிவில், சிஐடியு மாவட்டச் செயலாளர் பாரி தர்ணாவை முடித்து வைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்