காஞ்சிபுரம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியில் அரசு பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து புதிய கட்டிடம் கட்டுவதற்காக பழைய கட்டிடத்தில் பகுதியளவு இடிக்கப்பட்டு ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. ஆனால், பள்ளிகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நேரத்தில் புதிய கட்டிடம் கட்ட பழைய கட்டிடம் அப்புறப்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்தப் பள்ளியில் இடிக்கப்படாத சில கட்டிடங்கள் உள்ளன. பள்ளிகள் நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டாலும் இடிக்கப்படாத கட்டிடங்களில் அவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியும். புதிய கட்டிடப் பணிகள் நிறைவடைவதற்குள் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படும் பட்சத்தில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படாமல் தற்காலிக மாற்று இடங்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago