கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரூராட்சிகளில் செயல் படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது:
16 பேரூராட்சிகளையும் நவீனப்படுத்த புதிய திட்ட அறிக்கைகள் தயார் செய்ய வேண்டும். மழைநீர் வடிகால் அமைப்புகளை ஏற்படுத்தி பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மையான பேரூராட்சிகளாக வைக்க வேண்டும்.
பண்டிகை காலம் நெருங்குவதால் சந்தைகள், கடைவீதிகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை கண்காணிக்க வேண்டும்.
தினமும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
உதவி இயக்குநர் (பேரூராட் சிகள்) வெங்கடேசன், உதவி செயற்பொறியாளர் ராஜா, அனைத்து பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago