கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 562 கிராமங்களில் நிலவும் பிரச்சினைகளை அறிந்து அதற்கு தீர்வுகாணும் வகையில் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறியது:
மாவட்டத்தில் அன்றாடம் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மக்கள் மாவட்ட அலுவலகங்களை நாடிவரும் நிலை உள்ளது. மேலும் அவர்கள் அளிக்கும் மனுவை ஆராய்ந்த போது, சிறு பிரச்சினைகளுக்கு கூட மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். இதைக் கட்டுப்படுத்த முதற்கட் டமாக ஒவ்வொரு தாய் கிராமத் திற்கும் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் நியமிக்கப்படுவர்.
அவர்கள் அக்கிராமங்களுக்கு வாரத்திற்கு இருமுறை சென்று ஊர் தலைவர், கிராம நிர்வாக அலுவலரிடம் பேசுவர். அங்கு நிலவும் குற்றம் சார்ந்த தகவல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் தற்போதைய சமுதாய பிரச்சினை குறித்து கேட்டறிவர். பொதுமக்களிடம், காவலர்களின் தொடர்பு எண்ணையும் அளித்து, அவ்வப்போது நிகழும் சம்பவம் குறித்து தகவல் அளிக்கவும் பணிக்கப்படுவர்.
500 காவலர்கள்
வாரத்திற்கு இருமுறை கிராமங்களுக்குச் செல்லும் காவலர்கள் அங்கு அவ்வப்போது நிகழும் சம்பவங்களை தொகுத்து ஆவணம் தயார் செய்து, அதைபராமரித்து வருவர். மாவட்டத்தில் உள்ள 3 உட்கோட்ட காவல் பிரிவின்கீழுள்ள 500 காவலர்கள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப் படவுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வார இறுதியிலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களில் நிகழும் பிரச்சினைகள் குறித்த தகவல்களை உட்கோட்ட காவல் துணைக் காணிப்பாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும். துணைக் கண்காணிப்பாளர் அந்த அறிக்கையை ஆய்வு செய்து, அதில் முக்கியமானவற்றை காவல்கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இதன் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை மட்டுமின்றி, சமூகப் பிரச்சனைகளுக்கும் எளிதில் தீர்வு காணமுடியும். இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் குறைவதோடு, பொதுமக்களும் நிம் மதியாக இருக்கமுடியும். இத்தகைய செயல்பாடு காவல்துறைக்கு மட்டுமல்ல, வருவாய் துறையினருக்கும் பெரும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட, இப்பணியில் தனிப்பிரிவு காவலர்களையும் இணைக்க திட்டமிட்டு வருவதாகவும் கூறப் படுகிறது. இந்தப் பணியில் ஈடுபடுவோர் நடப்பு பணிகளையும் மேற்கொள்வர்.
கடலூர் மாவட்டத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சரவணன், ‘மொபைல் பேட்ரோல்’ என்ற பெயரில் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 3 காவலர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தி, அவர்களை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தொடர் ரோந்து பணி மேற்கொள்ளச் செய்தார்.
மேலும் ஊரின் முக்கியப் பிரமுகர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுடன் தொடர் இணைப் பில் இருக்குமாறு அறிவுருத்தி குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை மேற் கொண்டார்.
அதே போல் புதிதாக உருவாகியுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இந்த புதிய முறையை செயல்படுத்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago