தேசிய வேளாண்மை அபி விருத்தி திட்டத்தின் கீழ் 40 சதவீத மானியத்துடன் பண்ணை குட்டைகளில் கிப்ட்” திலேப்பியா” மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகளிடமிருந்து விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1,000 சதுர மீட்டரில் புதிய பண்ணை குட்டை அமைக்க ஆகும் செலவினத்தொகையில் 40 சதவீதம், அதிக பட்சம் ரூ,39,600 மானியமாக வழங்கப் படும்.
எனவே விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நிலம் மற்றும் நீர்வசதி உள்ள விவசாயிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மீன்வள உதவி இயக்குநர் அலுவலகம், 10 நித்தியானந்தம் நகர், வழுதரெட்டி, விழுப்புரம் என்ற முகவரியில், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் 16-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago