சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் சின்ன சேலத்தில் இருந்து 83 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சரக்கு ரயில் மூலமாக ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக வருவாயை அதிகரிக்க சிறப்பு வர்த்தகக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு வகையான சரக்குகள் ரயில் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதுவரை கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலத்துக்கு 4 முறை நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று சின்னசேலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் ஏளூரு நகருக்கு 83 நெல் அறுவடை இயந்திர வாகனங்கள் 32 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதன் மூலமாக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ.9.02 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
நெல் அறுவடை இயந்திரங்களை குறைந்த செலவில், குறைவான காலத்தில் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முடிவதால் அறுவடை இயந்திர வாகன உரிமையாளர்களும், தொழி லாளர்களும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago