பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைவாக இருந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது. அணைக்கு சராசரியாக 500 முதல் ஆயிரம் கனஅடி வரை நீர் வரத்து இருந்த நிலையில், கடந்த இரு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அணைக்கு விநாடிக்கு சராசரியாக 3266 கனஅடி நீர் வரத்து உள்ளது.

நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 3166 கன அடி நீர் வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 96.27 அடியாக இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 700 கன அடி நீரும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.

கோவை, நீலகிரியில் மழைப்பொழிவு நீடிப்பதால், அணைக்கான நீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்