திருச்சி விமானநிலையத்தில் டிராலி தள்ளும் தொழிலாளர்கள் நேற்று விமான நிலைய வளாகத்துக்கு வெளியே கஞ்சித் தொட்டி திறந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிராலி தள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் 20 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டிப்பது, அவர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவதுடன், அரசாணையின்படி தினக் கூலியாக ரூ.525 வீதம் வழங்க வேண்டும். அவர்களிடம் மாமூல் கேட்ட தனியார் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மாறன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிச் செயலாளர் கார்த்திகேயன், சிஐடியு போக்குவரத்து சங்க நிர்வாகிகள் மணிமாறன், லட்சுமணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago