காந்தி மார்க்கெட்டை திறக்க வலியுறுத்தி சுமைப் பணி தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுமைப் பணி தொழிற்சங்க கூட்டமைப்பினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் ராமர் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், எல்எல்எப் மாநிலச் செயலாளர் பிரபாகரன், எல்பிஎப் மண்டல துணைத் தலைவர் ராமலிங்கம், உருளைக் கிழங்கு கமிஷன் மண்டி சங்கச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்டத் தலைவர் குணசேகரன் ஆகியோர் கோரிக்கையை விளக்கிப் பேசினர்.

அப்போது, காந்தி மார்க்கெட்டை நம்பி சுமைப் பணி தொழிலாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி நகருக்கு வெளியே இடமாற்றம் செய்ய முடிவெடுத்திருப்பதில் நியாயமில்லை. எனவே, காந்தி மார்க்கெட்டை திறக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சிஐடியு, எல்எல்எப், எல்பிஎப் மற்றும் உருளைக் கிழங்கு கமிஷன் மண்டி ஆகியவற்றின் சுமைப் பணித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்