தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே செங்கானூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்பதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் தங்கள் ஊருக்குள் வர வேண்டாம் என்றும் கூறி பேனர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “செங்கானூருக்குச் செல்லும் வழியில் உள்ள ரயில் பாதைக்கு கீழ் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. மழைக் காலத்தில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்குவதால் பாதையை கடப்பது சிரமமாக உள்ளது. இதனால், கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினோம். இதையடுத்து, அதன் அருகில் தற்காலிக பாதை அமைத்து தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால், இதுவரை தற்காலிக பாதை எதுவும் அமைக்கவில்லை.
இந்த ஆண்டு மழைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில், சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தவோ, தற்காலிக பாதை அமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும், நீண்ட நாள் கோரிக்கையான செங்கானூருக்கு அரசு பேருந்து வசதி, சாலை வசதி, சுகாதார நிலையம், அரசு நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்கள் ஊருக்கு அரசியல் கட்சியினர் யாரும் வர வேண்டாம்” என்றனர்.
சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை அப்புறப்படுத்தவோ, தற்காலிக பாதை அமைக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago