திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ.26 கோடி பாக்கித் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஆலை சங்க நிர்வாகி பால முருகன் தலைமை வகித்தார். போராட்டத்தில், கரும்பு விவசாயி களை ஏமாற்றும் வகையில் செயல்படும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து முழக்கமிடப்பட்டது.

மேலும் விவசாயிகள் கூறும் போது, “கரும்பு விவசாயிகளுக்கு தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் ரூ.26 கோடி வழங்காமல் ஏமாற்று கிறது. மேலும், தமிழக அரசு அறி வித்த விலையை கூட வழங்காமல் உள்ளனர். இந்த தொகையை பெற்றுத்தர தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இதையடுத்து, போராட் டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து ஆட்சியர் கந்தசாமி பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர், “கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது” என்றார். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்