மறைந்த முன்னாள் அமைச்சருக்கு வேளாண்மைப் பல்கலை.யில் அஞ்சலி

By செய்திப்பிரிவு

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணை வேந்தருமான ஆர்.துரைக்கண்ணு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த அக்டோபர் 31-ம் தேதி காலமானார்.

இதையொட்டி வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. துணைவேந்தர், பல்கலைக்கழக உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் துரைக்கண்ணுவின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல, பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அனைத்துக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் வேளாண் அறிவியல் நிலைய ஆசிரியர் மற்றும் அலுவலர்கள் இணையம் மூலம் அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்