மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பெ.நா.பாளையம்: கோவை தொப்பம்பட்டியை அடுத்த ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் மதன்சேகர் மகன் ஹர்ஷவர்த்தன்(13). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். ஹர்ஷவர்த்தன் நேற்று முன்தினம் வீட்டருகே நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது பந்து, வீட்டு பால்கனியில் விழுந்தது. அலுமினிய கம்பியை பயன்படுத்தி ஹர்ஷவர்த்தன் பந்தை எடுக்க முயன்றார். அப்போது அலுமினிய கம்பி, மேலே சென்ற மின் கம்பியில் பட்டதில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த ஹர்ஷவர்த்தன், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்